தென் ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி!
Webdunia
புதன், 12 செப்டம்பர் 2007 (10:10 IST)
20 ஓவர்கள் கொண்ட உலகப்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
20-20 போட்டிகளுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேற்று மோதியது. டாஸ் வென்று தென் ஆப்பிரிக்கா முதலில் வெஸ்ட் இண்ட்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிரிஸ் கெய்ல்- சுமித் களம் இறங்கினர். இவரும் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர். தென் ஆப்பிரிக்கா பந்துகளை நாலாப்பக்கமும் சிதறடித்தனர். கிரிஸ் கெய்ல் 57 பந்துகளில் 117 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரி, 10 சிக்சர் அடங்கும். சுமித் 34 பந்தில் 35 ரன் எடுத்தார்.
சாமுவேல்ஸ், சந்தர்பால், கேப்டன் சர்வண் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 205 ரன் எடுத்தது. போலாக் 4 ஓவர்கள் வீசி 52 ரன் வாரி இறைத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். வண்டர்வாத், பிளன்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். மார்கட் 1 விக்கெட்டை கைப்பற்றினார்.
206 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் சுமித்தும், கிப்ஸ்சும் களம் இறங்கினர். தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடிய கிப்ஸ் 55 பந்துகளில் 90 எடுத்து கடைசி வரை ஆட்டம் இருந்தார். சுமித் 21 பந்துகளில் 28 ரன் எடுத்தார்.
டிவ் வில்லியர்ஸ் 9 பந்தில் 16 ரன் எடுத்து எட்வர்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். கேம் அதிரடியாக ஆடி வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்களை திணறடித்தார். 22 பந்துகளில் 46 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார் கேம். 17.4 ஓவரில் தென் ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட்டை மட்டும் இழந்து 208 ரன் எடுத்து வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர் ராம்பால் 4 ஓவர்கள் வீசி 52 ரன் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
ஆட்ட நாயகனாக கிரிஸ் கெய்ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா 2 புள்ளிகள் பெற்றது.
இன்று மோதும் அணிகள்
சி பிரியில் நியூசிலாந்து- கென்யா - பகல் 1.30 மணி (டர்பன்)
டி பிரிவில் பாகிஸ்தான்-ஸ்காட்லாந்து மாலை 5.30 மணி (டர்பன்)
பி பிரிவில் ஆஸ்ட்ரேலியா-ஜிம்பாப்வே இரவு 9.30 மணி (கேப்டவுன்)