ஆசிய தடகளம் : இந்தியாவிற்கு 3 தங்கம்!

Webdunia

செவ்வாய், 19 ஜூன் 2007 (20:57 IST)
பாங்காக்கில் நடைபெற்று வரும் ஆசிய தடகளப் கிராண்ட் பிரீ போட்டிகளில் இந்தியா 3 தங்கம் உட்பட 12 பதக்கங்களை வென்றுள்ளது!

3,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் சுனில்குமார் தங்கம் வென்றார். இப்போட்டியில் 2-ம் இடத்தை சுரேந்திர சிங் வென்றார்.

பந்தய தூரத்தை சுனில் குமார் 8 நிமிடம் 00.76 நொடிகளில் கடந்து முதலிடத்திற்கு வந்தார். சுரேந்திர சிங் அவரை விட 00.10 நொடிகளில் பின்தங்கி இரண்டாவதாக வந்தார்.

மகளிருக்கான 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் சினிமோல் பாலோஸ் தங்கம் வென்றார். பந்தய தூரத்தை 4 நிமிடம் 12.61 நொடிகளில் கடந்து முதலிடத்திற்கு வந்தார். இப்போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் மற்றொரு வீராங்கனையான சுஷ்மா 3-ம் இடத்தை வென்றார். (பி.டி.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்