நாடாளுமன்ற வளாகத்தில் இரண்டு அறைகளில் திடீரென ஏற்பட்ட தீயை தீயணைப்பு படையினர் விரைந்து அணைத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. குருநானக் பிறந்த நாளை முன்னிட்டு நாடாளுமன்றத்துக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று மதியம் 12.30 மணியளவில் நாடாளுமன்ற அனெக்சில் உள்ள அறை 7-ல் இருந்து புகை கிளம்பியது. அறையை திறந்து பார்த்த போது அங்கு தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. மெல்ல தீ அறை 8- க்கும் பரவியது.
உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 6 தீயணைப்பு வாகனங்களுடன் வந்து தீயை அணைத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.