மும்பை வணிக வளாகத்தில் பயங்கர தீ

வெள்ளி, 7 செப்டம்பர் 2012 (13:26 IST)
மும்பையில் அமைந்திருக்கும் வணிக வளாகத்தின் 12-வது மாடியில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது.தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மும்பை பாந்த்ரா குர்லா என்னும் இடத்தில் உள்ள முதல் சர்வதேச நிதி மையத்தின் வளாகத்தின் 11-வது மாடியில் இன்று காலை திடிரென தீ பிடித்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீ அனைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்த முயன்றனர், எனினும் தீ 13 ஆவது மாடி வரை பரவியது.

அருகில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவாமல் இருக்க தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆறு தீயணைப்பு வண்டிகள், ஆறு தண்ணீர் வண்டிகள் மற்றும் சில சிறப்பு உபகரண வாகனங்கள் மூலம் தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர்.

இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அங்கு உயிர் சேதம் ஏதும் இல்லை என கூறப்படுகிறது.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்