பிரதமருடன் தமிழக காங்கிரசார் சந்திப்பு

செவ்வாய், 13 மார்ச் 2012 (10:34 IST)
FILE
பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழகக் காங்கிரஸ் எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை சந்திக்கவுள்ளனர்.

இந்தச் சந்திப்பின்போது, இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கொண்டு வரப்படும் தீர்மானம் மீது இந்தியாவின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்துமாறு பிரதமரிடம் அவர்கள் கோருவார்கள் என்று தெரிகிறது.

காலை 11.30 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங்கை நாடாளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் தமிழகக் காங்கிரஸ் எம்.பி.க்கள் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

English Summay: Tamil Nadu Congress MPs to meet PM Manmohan Singh today and they are expected to insist on the standpoint regarding the US Resolution against Srilanka.

வெப்துனியாவைப் படிக்கவும்