கறுப்பு பண விசாரணை தொடங்கிவிட்டது: பிரணாப்

புதன், 19 அக்டோபர் 2011 (17:24 IST)
இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட கறுப்பு பண பரிவர்த்தனைகள் குறித்த விசாரணை தொடங்கி விட்டதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற பொருளாதார பத்திரிகை ஆசிரியர்களின் கூட்டத்தில் பேசுகையில் இதனை தெரிவித்த அவர், பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்பட்ட 9,900 க்கும் அதிகமான தகவல் குறிப்புகளின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

பல்வேறு நாடுகளிலிருந்து இந்திய பிரஜைகள் மேற்கொண்ட சந்தேகத்திற்குரிய பண பரிவர்த்தனைகள் தொடர்பாக பெறப்பட்ட தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதன் மீதான விசாரணை தொடங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கறுப்பு பணம் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளதோடு, எதிர்கட்சிகள் மற்றும் சிவில் உரிமைகள் குழுவினரிடமிருந்தும் அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்