மோடி உண்ணாவிரதம் ஒரு அரசியல் ஸ்டண்ட்: பஸ்வான்

சனி, 17 செப்டம்பர் 2011 (13:14 IST)
குஜ்ராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் உண்ணாவிரதம் ஒரு அரசியல் ஸ்டண்ட் என்று லோக் ஜன்சக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் குற்றம் சாட்டியுள்ளார்.

அமைதி, சமூக நல்லிணக்கம் கோரி 3 நாட்களுக்கு உண்ணாவிரம் இருக்கப்போவதாக அறிவித்திருந்த மோடி, குஜராத் பல்கலை வளாகத்தில் இன்று காலை தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

இந்நிலையில் மோடியின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

மோடியின் உண்ணாவிரதத்திற்கு பா.ஜனதா தலைவர்கள் தவிர்த்து, தமிழக முதலமைச்சரும்,அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மோடியின் உண்ணாவிரதம் ஒரு அரசியல் ஸ்டண்ட் என்று லோக் ஜன்சக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் குற்றம் விமர்சித்துள்ளார்.

நரேந்திர மோடியின் உண்ணாவிரதம் ஒரு அரசியல் நாடகமாக உள்ளது. இதன் மூலம் தன்னை ஒரு மதச்சார்பற்ற தலைவராக காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்.உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து மோடி பிரதமர் பதவியை இலக்காக கொண்டு அவர் அரசியல் நாடகமாடுகிறார் என பஸ்வான் மேலும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்