''2ஜி விவகாரத்தில் நீதிமன்றத்தில் விசாரணை முடியும் முன்னரே நாடாளுமன்றமே முன்கூட்டி தீர்ப்பளிக்கக்கூடாது'' என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்த விவகாரம் நீதிமன்றத்தின்முன் உள்ளது. நீதிமன்றத்திடம் இந்த விவகாரத்தை விட வேண்டும். நாடாளுமன்றமே முன்கூட்டி தீர்ப்பளிக்கக்கூடாது என்றார்.
லோக்பால் மசோதா குறித்து விவாதிக்க தயாராக உள்ளோம் என்று தெரிவித்த பிரதமர், லோக்பால் மசோதாவின் கதி நாடாளுமன்றத்தில் தீர்மானிக்கப்படும் என்றார்.
ஜனநாயகத்தில் நாடாளுமன்றம் இறையாண்மை உள்ள அமைப்பு என்றும் அதை இயங்கவும், அதன் கடமையைச் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.