என்கவுண்டர் வழக்கு: குஜராத் காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு

செவ்வாய், 21 ஜூன் 2011 (19:14 IST)
போலி என்கவுண்டரில் ஒருவரை சுட்டுக்கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத் மற்றும் மகாராஷ்ட்ரா காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் அடுத்த நரோடா பகுதியில் கடந்த 2003 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி சாதிக் ஜமால் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இது போலி என்கவுண்டர் என்று குற்றம்சாட்டிய அவரது சகோதரர் சபீர் ஜமால் மெக்தர், குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த என்கவுண்டரில் சம்பந்தப்பட்ட குஜராத் மற்றும் மகாராஷ்டிரா காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு அகமதாபாத் காவல்துறையின் குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து மேற்கூறிய என்கவுண்டரில் தொடர்புடைய இரு மாநில காவல்துறையினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்