செப்.30ஆம் தேதி அயோத்தி தீர்ப்பு -அலகாபாத் நீதிமன்றம் அறிவிப்பு
செவ்வாய், 28 செப்டம்பர் 2010 (15:33 IST)
ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்குத் தீர்ப்பை ஒத்திவைப்பதற்கான முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்றம் இம்மாதம் 30ஆம் தேதி தீர்ப்பை வெளியிடும் என்று அறிவித்துள்ளது.
30ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு தீர்ப்பு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ரமேஷ் சந்திர திரிபாதி உச்சநீதிமன்றத்தில் அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை தள்ளிவைக்குமாறு செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த சில நிமிடங்களில் அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.