குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தப் பின் ஹெட்லி நாடு கடத்தல்: உள்துறைச் செயலர்

திங்கள், 21 டிசம்பர் 2009 (15:55 IST)
மும்பை மீது நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சதித்திட்டத்தில் தொடர்புடையவர் என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகு டேவிட் கோல்மேன் ஹெட்லியை இந்தியாவிற்கு கொண்டுவரும் சட்ட ரீதியான முயற்சி முன்னெடுக்கப்படும் என்று உள்துறைச் செய்லர் ஜி.கே.பிள்ளை கூறியுள்ளார்.

மும்பையின் மீது தாக்குதல் நடத்துவதற்கு உதவிடும் வகையில் உளவு பார்த்துள்ளார் என்பது, தாக்குதல் நடத்துவதற்கான இலக்குகளை நோட்டம் விட்டு, அதனை லஸ்கர் இயக்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார் என்கின்ற குற்றச்சாற்றுகள் மீது தேச புலனாய்வு அமைப்பு விசாரணை செய்து வருகிறது என்றும், இந்த விசாரணை முடிந்ததும் இந்திய நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதன் பின்னர் ஹெட்லி எதிராக கைது உத்தரவைப் பெற்று, பின் அமெரிக்காவை நாடுவோம் என்று கூறியுள்ளார்.

“ஹெட்லிக்கு எதிரான புலனாய்வு முடியட்டும், அதன் பிறகு அவர் மீது குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்வோம். அதன் மீது கைது உத்தரவைப் பெற்று பிறகு அமெரிக்காவை (அவரை நாடு கடத்தக் கோரி) அணுகுவோம்” என்று டார்ஜிலிங்கில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. பிள்ளை கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்