பெட்ரோல் ரூ. 4, டீசல் ரூ. 2 விலை உயர்த்தப்பட்டது

புதன், 1 ஜூலை 2009 (19:31 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வைத் தொடர்ந்து, இந்தியாவில் பெட்ரோல் லிட்டருக்கு 4 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன.

webdunia photoFILE
இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு (புதன்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்று பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

என்றாலும் மண்ணெண்ணெய், சமையல் எரிவாயுவின் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், அவற்றின் விற்பனையில் ஏற்படும் மானியத்தை அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் முரளி தியோரா கூறினார்.

மண்ணெண்ணெய் லிட்டருக்கு 15.26 ரூபாயும், எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 92.96 ரூபாயும் இழப்பு ஏற்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீண்டும் பதவியேற்ற பின் முதல்முறையாக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.