இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இந்த நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்ட 30 பேரில் 11 பேர் சிகிச்சைக்குப்பின் குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறியிருக்கிறார்.
புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்நோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடியது என்றும் இதற்கான மருந்துகள் இந்தியாவில் இருப்பதாகவும் கூறினார்.
இந்தியாவின் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்புக்குள்ளாகி இருப்போர் எண்ணிக்கை மிகமிகக் குறைவு என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நோய் உலக அளவில் முற்றிலுமாக ஒழிக்கப்படும்வரை இந்தியர்கள் அதிக அளவில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அமைச்சர், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நிலைமை சீரடைந்துவிடும் என்றார்.