`ராஜீவை கொலை செய்த விடுதலைப்புலிகளை இந்தியா மனனிக்காது'

செவ்வாய், 21 ஏப்ரல் 2009 (18:28 IST)
ராஜீவ் காந்தியை படுகொலை செய்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை இந்தியா மன்னிக்க முடியாது என்று ராஜீவ் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மகளான பிரியங்கா வதேரா கூறியிருக்கிறார்.

தனது தந்தையைக் கொன்றவர்கள் மீது தாமோ அல்லது தனது குடும்பத்தினரோ தனிப்பட்ட பகை எதையும் வைத்துக் கொள்ளவில்லை என்ற போதிலும், ஒரு நாட்டின் முன்னாள் பிரதமர் என்பதால், ராஜீவைக் கொன்றவர்களை இந்திய மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று அமேதியில் தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த பேட்டியில் பிரியங்கா கூறினார்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியின் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருப்பதை அவர் குறைகூறினார்.

என்றாலும் பிரபாகரனை யார் புகழ்ந்து பேசினாலும், அதற்காக தனிப்பட்ட வருத்தம் ஏதும் தமக்குக் கிடையாது என்றார் அவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்