குல்லுவில் லேசான நிலநடுக்கம்!

இமாச்சல பிரதேசத்திலுள்ள கோடை குளிர் சுற்றுலாத் தலமான குல்லு நகரில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 07.04 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. பூமத்திய ரேகையிலிருந்து 31.5 டிகிரி வடக்கும், அட்ச ரேகை 77.5 டிகிரி கிழக்கும் சந்திக்கும் இடத்தை மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று இந்திய வானியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

குல்லு நகரம் அமைந்துள்ள பகுதி இமாலய மலைத் தொடரின் அடிவாரம் ஆகும். அது உலகின் தீவிர நிலநடுக்க பகுதிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இப்பகுதிகளில் ஏற்படும் லேசான நிலநடுக்கங்களும் முக்கியத்துவம் உள்ளதாக நிலவியல் ஆய்வாளர்களால் கவனிக்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்