நவீன் பட்நாயக்குடன் சரத்பவார் கூட்டு பேரணி

தேசியவாத காங்கிரஸ கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான சரத்பவார் இன்று, ஒரிசா மாநிலத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார பேரணிகளில் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்குடன் இணைந்து கலந்து கொள்கிறார்.

ஒரிசா மாநிலத்தில் இடதுசாரிக் கட்சிகளுடன் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் தொகுதி உடன்பாடு செய்து கொண்டுள்ளது.

என்றாலும் சரத்பவார், இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பேரணிகளிலும் பங்கேற்பாரா என்பது தெரியவில்லை.

கடந்த 3ஆம் தேதியன்று பிஜேடி-என்சிபி-இடதுசாரிகள் கூட்டு பேரணியில் விமான தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் சரத்பவார் பங்கேற்க இயலாமல் போனது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்