பிரதமர் மன்மோகன் சிங் பலவீனமான பிரதமர் என்று பாஜக கூறியுள்ள குற்றச்சாட்டை காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பிரணாப் முகர்ஜி கண்டித்துள்ளார்.
பிரதமர் என்பவர் மல்யுத்த வீரராக இருக்க வேண்டும் என்று பாஜக எதிர்பார்க்கிறதா? என்று பிரணாப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
கடந்த 5 ஆண்டுகால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், மன்மோகன் சிங் பல்வேறு சாதனைகளை செய்திருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
மாறாக பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அத்வானிதான் பலவீனமானவர் என்று பிரணாப் குற்றம்சாட்டினார்.