கல்வி அறிவின்மை: குடியரசுத் தலைவர் கவலை

ஞாயிறு, 22 பிப்ரவரி 2009 (13:44 IST)
கல்வி அறிவின்மை, வறுமை, நோய்கள் ஆகிய மூன்றுமே தற்போது நாட்டின் மிகப் பெரிய கவலை என குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறியிருக்கிறார்.

புதுடெல்லியில் நேற்று தம்மை சந்தித்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் மனைவியர் குழுவிடம் இதனை தெரிவித்த அவர், மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆந்திராவில் அடைந்துள்ள வெற்றியை அவர்களிடம் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொருவரும் கல்வி அறிவில்லாத ஒருவருக்காவது போதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டார். கல்விதான் நிலையான செல்வம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்