மும்பையில் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானியர்கள்?

வியாழன், 27 நவம்பர் 2008 (15:33 IST)
மும்பை பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்களில் சிலர், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மும்பையில் பயங்கரவாத செயலை நடத்த படகுகள் மூலம் வந்தவர்களில் சிலர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பிடிபட்ட பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணையில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

எனினும் பயங்கரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதை மராட்டிய துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் உறுதிப்படுத்தவில்லை.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, பயங்கரவாதிகள் யார், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த செய்திகள் அரசிடம் இருந்தாலும், அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிணையக் கைதிகள் விடுதலை செய்யப்படும் வரை அதுகுறித்து தெரிவிக்கப்படாது. இதனைத் தெரிவிக்க வேண்டிய தருணத்தில் நிச்சயம் வெளியிடுவோம் என்று பதிலளிதார்.

வெப்துனியாவைப் படிக்கவும்