ஒகேனக்கல்: கர்நாடக அமைச்சர் எதிர்ப்பு

வியாழன், 6 நவம்பர் 2008 (03:21 IST)
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்த வேண்டும் என்று கர்நாடக அரசு கோரியுள்ளது.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பாக தமிழக அரசு முரண்பட்ட தகவல்களை அளித்து வருவதாக கர்நாடக மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பஸவராஜ் பொம்மை புதுடெல்லியில், மத்திய நீர்வளத் துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசுகையில் தெரிவித்தார்.

முதலில் குறைந்த அளவு தண்ணீரே எடுக்கப்படும் என்று தமிழகம் கூறியதாகவும், தற்போது புதிய அறிவிப்பாக 2.5 டி.எம்.சி தண்ணீர் எடுக்கப்போவதாக திட்ட அறிக்கையை மாற்றியிருப்பதாக பஸவராஜ் குறைகூறினார்.

எனவே தமிழக அரசு இந்த கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றாமல் தடுக்க உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் கர்நாடக அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்