அந்தமானில் மிதமான நிலநடுக்கம்!

சனி, 4 அக்டோபர் 2008 (11:34 IST)
புதுடெல்லி: அந்தமான் தீவில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 5.5 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இன்று அதிகாலை 2.50 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதனால் உயிர், பொருட் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கபட்டுள்ளது.

அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து வடமேற்கே 150 கி.மீ தொலையில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் 35 கி.மீ ஆழத்தில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்