பீகாரில் சாலையோரம் டிவி பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதியதில் 14 பேர் பலியானதுடன், 12 பேர் காயமடைந்தனர்.
பாட்னாவிலிருந்து 160 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாத்நாஹா கிராமத்தில் சாலையோரம் டிவி பார்த்துக்கொண்டிருந்தவர்களின் மீது அந்த வழியாக வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
இதில் சம்பவ இடத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் முசாஃபர்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர் என்று சிதர்மஹி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதற்கிடையில், இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் பலியானவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி சாலை மறியல் செய்தனர்.