ம.பி: சாம்பல் ஆற்றில் படகு கவிழ்ந்து 14 பேர் பலி!

செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (11:37 IST)
மத்திய பிரதேசத்தில் உள்ள சாம்பல் ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்த 6 சிறுவர்கள், ஒரு பெண் உட்பட 14 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

படகில் பயணித்த மேலும் 9 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மொரினா மாவட்ட காவல்துறை ஆய்வாளர் சந்தோஷ் சிங், நீரில் மூழ்கிய 14 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுவிட்டதாக கூறினார்.

ராஜஸ்தானின் கராவுளி பகுதியில் இருந்து மத்திய பிரதேசத்தின் கோரய பாபா கோயிலுக்கு சாம்பல் ஆற்றின் வழியாக படகில் அவர்கள் சென்றதாகவும், படகு ஆற்றில் மூழ்கத் துவங்கியதைத் தொடர்ந்து பலர் பீதியில் ஆற்றிக் குதித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்