பிந்‌த்ராவுக்கு லாலு பிரசாத் குளு குளு பரிசு!

திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (17:30 IST)
ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஒற்றையர் பி‌‌ரிவு 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்அபினவ் பிந்‌த்ரா வாழ்நாள் முழுவதும் முதல் வகுப்பு குளிர்சாதன பெ‌ட்டி‌யி‌ல் ஒரதுணையுடன் இலவசமாக பயணம் செய்யலாம் என்று மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் லாலு பிரசாத் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவ‌ர் ‌விடு‌த்து‌ள்வா‌ழ்‌த்து‌சசெ‌ய்‌தி‌யி‌ல், ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி‌ச் சுடும் போட்டியிலதங்கம் வென்றுள்ள அபினவ் பிந்‌த்ராவின் சாதனை இனி நடைபெற உ‌ள்ள போட்டிக‌ளிலு‌ம் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற உறுதியை இந்திய தடகவீரர்கள் மத்தியில் விதைத்துள்ளது.

அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து‌கொள்கிறேன். அவரது சாதனைக்கு பரிசாக, அவர் வாழ்நாள் முழுவதும் சதாப்தி, ராஜதானி உட்பட அனைத்து ரயில்களிலும் முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் ஒரு துணையுடன் இலவசமாக பயணம் செய்யலா‌எ‌ன்றதெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்