இமாசல‌பிரதேச மலை‌க்கோயில் நெரிசலில் ‌சி‌க்‌‌கி 146 பக்தர்கள் ப‌லி!

திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (09:19 IST)
இமாசலபிரதேச மலைக்கோவில் விழா நெரிசலில் சிக்கி 146 பக்தர்கள் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர். இவர்களில், 50 பேர் குழந்தைகள். 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

பிலாஸ்பூர் மாவட்டத்தில் மலைப்பகுதியில் நயனதேவி கோயிலில் 'நவராத்ரா' விழா நடந்து வருவதா‌ல் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு குவிந்தனர்.

அப்போது, மழை காரணமாக மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு கற்கள் உருண்டு வருவதாக பர‌விய வதந்தியால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இ‌‌ந்த நெ‌ரிச‌லி‌ல் ‌சி‌க்‌‌கி 146 பே‌ர் ந‌ி‌க‌ழ்‌விட‌த்‌திலேயே ப‌லியானா‌ர்க‌ள். இவ‌ர்க‌ளி‌ல் 50 பே‌ர் குழ‌ந்தைக‌ள். 100‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் படுகாய‌ம் அடை‌ந்தன‌ர்.

தகவ‌ல் அற‌ி‌ந்து ‌நி‌க‌ழ்‌விட‌த்‌தி‌ற்கு ‌விரை‌ந்து வ‌ந்த உயர் அதிகாரிகள், காவ‌ல்துறை அதிகாரிகள் மீட்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களுக்கு மாநில ஆளுநர் பிரபா ராவ், முதல்வர் துமால் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணம் அளிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து முழு விசாரணை நடத்த நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்