காஷ்மீர்: பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி!

புதன், 23 ஜூலை 2008 (11:47 IST)
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ராம்பன் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 29 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ராம்பன் மாவட்டத்தில் உள்ள ஷெர்பிபி பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில், 400 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததாகவும், அதில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்றும் காவ‌ல்துறை‌யின‌ர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த போது இ‌ந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தகவலறிந்து ராணுவம், காவல்துறையினர் அ‌ங்கு ‌விரை‌ந்து செ‌ன்று மீட்புப் பணிக‌ளி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

பள்ளத்தில் இருந்து இதுவரை 13 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 31 பேரில், இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்