புதுச்சேரி ஆளுநராக கோவிந்த்சிங் குர்ஜார் பதவி ஏற்பு!
புதன், 23 ஜூலை 2008 (13:18 IST)
ராஜஸ்தான் மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான கோவிந்த் சிங் குஜ்ஜார், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
ஆளுநர் பொறுப்பை ஏற்கும் வகையில் அவர் கடந்த 17ஆம் தேதி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து புதுச்சேரியின் புதிய ஆளுநராக கோவிந்த்சிங் குர்ஜார் இன்று பதவி ஏற்றார்.
அவருக்கு தலைமை நீதிபதி கிருஷ்ணராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய ஆளுநருக்கு முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.