ு 94.
அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடக்கின்றன.
1971 ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் நடந்தபோது இந்திய ராணுவத் தளபதியாக இருந்தவர் சாம் மானக்ஷா. இவரது தலைமையிலான படையினர் பாகிஸ்தான் ராணுவத்தினரை விரட்டியடித்து பெரும் வெற்றிபெற்றனர். இப்போரில்தான் வங்கதேசம் விடுதலை பெற்றது.
'சாம் பகதூர்' என்று அழைக்கப்படும் சாம் மானக்ஷாவிற்கு 1973 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதன் முதலில் ஃபீல்டு மார்ஷல் எனும் மிக உயரிய பட்டம் வழங்கப்பட்டது. இவருடன் கே.எம். கரியப்பாவிற்கும் இப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
1914 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி அமிர்தசரசில் பிறந்த மானக்ஷா அங்கு பள்ளிப்படிப்பையும், நைனிடாலில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார்.
1932 ஆம் ஆண்டு டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியின் முதல் குழுவில் சேர்ந்தார். 1934ஆம் ஆண்டு அங்கு தேர்ச்சிபெற்று இந்திய ராணுவத்தில் செகண்ட் லெப்டினன்ட்டாகச் சேர்ந்தார்.
ராணுவத்தில் தனது திறமையினால் படிப்படியாக உயர்ந்து 1869 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாகப் பதவியேற்றார். 1972 ஆம் ஆண்டு அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
40 ஆண்டுகால ராணுவப் பணிக்குப் பிறகு கடந்த 1973 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற மானக்ஷா நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்டிச்சோலை பகுதியில் வசித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவினால் குன்னூர் எம்ஆர்சி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த மானக்ஷா, இன்று அதிகாலை 12.30 மணியளவில் காலமானதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அவரது உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டருக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் உதகையில் உள்ள பார்சி இடுகாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதிச் சடங்குகள் நடக்கின்றன. இதில் ராணுவத் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எம்.எல்.நாயுடு, மத்திய பாதுகாப்பு இணையமைச்சர் பள்ளம் ராஜூ மற்றும் தமிழக அமைச்சர் ஒருவரும் பங்கேற்பர் என்று ராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்!
முன்னாள் ராணுவத் தளபதி மானக்ஷாவின் மறைவிற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மானக்ஷாவின் தலைமைப் பொறுப்பையும் புத்திசாலித்தனமான உத்திகளையும் ராணுவ வரலாற்று ஆசிரியர்கள் சாதனைகளாகக் கொள்வார்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.