குஜ்ஜார்கள் போராட்டத்தால் ரயில்வேக்கு ரூ.40கோடி இழப்பு!

புதன், 11 ஜூன் 2008 (13:13 IST)
பழங்குடியினர் அ‌ந்த‌ஸ்து வே‌ண்டி குஜ்ஜார்கள் நட‌த்‌திய போராட்டத்தினால் ரயில்வே துறைக்கு ரூ.40 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

கடந்த 17 நாட்களாக அவர்கள் நடத்தி வந்த போராட்டத்தினால் பல ரயில்கள் தடம் மாற்றப்பட்டன, பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பயணிகளுக்கு கட்டணத்தை திருப்பி செலுத்தியது, சரக்கு ரயில்கள் போக்குவரத்தில் இடையூறுகள், தண்டவாளங்கள் சேதமடைந்தது ஆகிய விதங்களில் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்