அரையாண்டு தேர்வு மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை இன்றுடன் நிறைவு பெறுவதை அடுத்து, நாளை முதல் பள்ளி திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒன்பது நாள் விடுமுறை இன்றுடன் முடிந்து, நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மாணவ, மாணவிகள் தயார் நிலையில் உள்ளனர்.