குஜ்ஜார்கள் போராட்டத்தால் ரயில்கள் ரத்து!

வெள்ளி, 6 ஜூன் 2008 (14:10 IST)
குஜ்ஜார் இனத்தவர்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி நடத்திவரும் ஆர்பாட்டம் காரணமாக ராஜஸ்தான் வழி செல்லும் சுமார் 27 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் பயணிகள் இந்த போர்டாட்டத்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர், மேலும் பயணிகள் பாதுகாப்பு கருதி ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக வடக்கு ரயில்வே பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில ரயில்கள் வேறு வழியே திருப்பி விடப்பட்டுள்ளன. மும்பை ராஜதானி விரைவு ரயில், பாந்த்ரா- ஜம்மு ஸ்வராஜ் விரைவு ரயில், ஆகிய ரயில்கள் மாற்றுத் தடங்களில் திருப்பி விடப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்