குமாரசா‌மி, எடியூர‌ப்பா வெ‌ற்‌றி

ஞாயிறு, 25 மே 2008 (11:23 IST)
க‌ர்நாடக மா‌நில ச‌ட்ட‌ப்பேரவை‌த் தே‌‌ர்த‌லி‌ல் மு‌ன்னா‌ள் முதலமை‌ச்ச‌ர்க‌ள் குமாரசா‌மியு‌ம், எடி‌யூர‌ப்பாவு‌ம் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளா‌ர்க‌ள்.

சி‌கா‌ரிபுரா தொகு‌தி‌யி‌ல் போ‌ட்டி‌யி‌ட்ட பாஜக வே‌ட்பாள‌ர் எடியூர‌ப்பா, 20,000‌க்கு‌ம் அ‌திகமான வா‌க்குக‌ள் பெ‌ற்று மு‌ன்‌னிலை‌யி‌ல் உ‌ள்ளா‌ர். இவரை எ‌தி‌ர்‌த்து க‌ர்நாடக மா‌நில சமா‌ஜ்வாடி‌த் தலைவரு‌ம், மு‌ன்னா‌ள் முதலமை‌ச்சருமான ப‌ங்கார‌ப்பா போ‌ட்டி‌யி‌ட்டா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

மத‌ச்சா‌ர்ப‌ற்ற ஜனதாதள வே‌ட்பாளரு‌ம், மு‌ன்னா‌ள் முதலமை‌ச்சருமான குமாரசா‌மி 25,000 வா‌க்குக‌ள் அ‌திக‌ம் பெ‌ற்று வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளா‌ர்.

ஆனா‌ல், மத‌ச்சா‌ர்ப‌ற்ற ஜனதா தள‌‌‌க் க‌ட்‌சி‌யி‌ன் தலைவரான மெராகு‌தி‌ன் ப‌ட்டே‌ல் ஹு‌ம்னாபா‌த் தொகு‌தி‌யி‌ல் தோ‌ற்று‌வி‌ட்டா‌‌ர்.

கா‌ங்‌கிரசை‌ச் சே‌ர்‌ந்த மு‌ன்னா‌ள் முதலமை‌ச்ச‌ர் தர‌ம்‌சி‌ங் அ‌திக வா‌க்குக‌ள் பெ‌ற்று மு‌ன்‌னிலை‌யி‌ல் உ‌ள்ளா‌ர்.

க‌ர்நாடக மா‌நில கா‌ங்‌கிர‌‌ஸ் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ம‌ல்‌லிகா‌ர்ஜூன கா‌ர்கேயு‌ம் மு‌ன்‌னிலை‌யி‌ல் உ‌ள்ளா‌ர்.

க‌ர்நாடக ச‌ட்ட‌ப்பேரவை கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌த் தலைவராக இரு‌ந்த எ‌ச்.கே. ப‌ட்டீ‌ல் ‌‌பிதானூ‌ர் தொகு‌தி‌யி‌ல் 9,000 வா‌க்குக‌ள் குறைவாக‌‌ப் பெ‌ற்று ‌பி‌ன்த‌ங்‌கியு‌ள்ளா‌ர்.

கா‌ங்‌கிர‌ஸ் வே‌ட்பாளரு‌ம், நடிகருமான அ‌ம்‌ரி‌ஷ‌் ஸ்ரீரஙக‌‌ப்ப‌ட்டின‌ம் தொகு‌தி‌யி‌ல் ‌பி‌ன்த‌ங்‌கியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்