ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு!

ஞாயிறு, 18 மே 2008 (12:47 IST)
ஜெ‌ய்‌ப்பூ‌‌ர் கு‌ண்டுவெடி‌ப்பு ப‌ற்‌றி தகவ‌ல் கொடு‌ப்பவ‌ர்களு‌க்கு ரூ.10 ல‌ட்ச‌ம் ப‌ரிசு வழ‌ங்க‌ப்‌படு‌ம் எ‌‌ன்று ராஜ‌ஸ்தா‌ன் காவ‌‌ல்துறை அ‌றி‌வி‌‌த்து‌ள்ளது.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் கட‌ந்த 13ஆ‌ம் தே‌தி 7 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 63 பேர் பலியானார்கள்.

குண்டு வைத்ததாக கருதப்படும் தீவிரவாதிகள் 7 பேரின் வரை படங்களையும் ராஜஸ்தான் காவ‌‌ல்துறை வெளியிட்டது. எனினும், குண்டு வைத்த தீவிரவாதிகள் யாரும் இதுவரை கைதாகவில்லை.

இந்த நிலையில், குண்டு வைத்த தீவிரவாதிகள் பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ.10 லட்ச‌ம் ப‌ரிசாக வழங்கப்படும் என்று ராஜஸ்தான் காவ‌ல்துறை அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்