பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் கஹுதாக் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து தகர்த்தனர்.
கயா மாவட்ட வாரிய முன்னாள் தலைவர் பிந்தேஷ்வரி பிரசாத் யாதவிற்கு சொந்தமான இந்த பெட்ரோல் நிலையத்தை தடை செய்யப்பட்ட சி.பி.ஐ. மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 200 பேர் முற்றுகையிட்டனர்.
பெட்ரோல் நிலையத்தின் இரண்டு ஊழியர்களைத் தங்கள் வசம் பிடித்து வைத்த இவர்கள் பெட்ரோல் நிலையத்தை வெடி வைத்து தகர்த்தனர். அதன் பிறகு அந்த ஊழியர்களை விடுவித்துள்ளனர்.
பெட்ரோல் நிலைய முதலாளியிடம் பணம் கேட்டு மாவோயிஸ்டுகள் மிரட்டியதாகவும், பணம் கொடுக்க மறுக்கப்பட்டதால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.