இது குறித்து அமெரிக்க அயலுறவு துணை அமைச்சர் நிகோலஸ் பர்ன்ஸ் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக விவாதிக்க இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அடுத்தமாதம் அமெரிக்கா வரவுள்ளார். அவர் வரும் தேதி பின்னர் முடிவு செய்யப்படும் என்றார்.
இந்தியாவுடனான அணுசக்தி உடன்பாட்டை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்க அயலுறவு அதிகாரிகளின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.
பிரணாப் முகர்ஜியின் வருகைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ், அவரது வருகையின்போது அணுசக்தி ஒப்பந்தம், இருதரப்பு உறவுகள், எரிசக்தி ஒத்துழைப்பு, விண்வெளி அறிவியல் ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்படும் என்றார்.