குஜராத்: நாளை 2 ஆம் கட்ட வாக்குப் பதிவு! பலத்த பாதுகாப்பு!
ஞாயிறு, 16 டிசம்பர் 2007 (09:56 IST)
குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் இரண்டாவது கட்டமாக மீதமுள்ள 95 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நாள ை நடக்கிறது. தேர்தலுக்காக விரிவான முன்னேற்பாடுகள் முடிந்துள்ள நிலையில ், அசம்பாவித நிகழ்வுகளைத் தடுப்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் பரபரப்பூட்டும் வேட்பாளர்களாக முதல்வர் நரேந்திர மோட ி, அவரை எதிர்த்துப் போட்டியிடும் மத்திய அமைச்சர் தின்ஷா பட்டேல ், மாநில அமைச்சர்கள் அனந்தீபன் பட்டேல ், அமித் ஷ ா, அஷோக் பட ், மூத்த காங்கிரஸ் தலைவர் நர்ஹாரி அமீன் ஆகியோர் உள்ளனர். இத்தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வுக்கும் காங்கிசுக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பழங்குடியினரின் வாக்குகளை அதிகம் வைத்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியும் தனியாகப் போட்டியிடுகிறது. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மத்திய குஜராத ், வடக்கு குஜராத் ஆகிய பகுதிகளில் உள்ள 11 மாவட்டங்களில் பரவிக் கிடக்கும் 95 தொகுதிகளில் வசிக்கும் 1.87 கோடி வாக்காளர்கள ், 599 வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறார்கள். காக்ட ா, சுஜித்ர ா, கம்பாட ், கரம்சாத ், நடியாத ், ஆனந்த் போன்ற பதற்றம் மிகுந்த பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 50,000 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் தவிர துணை ராணுவத்தின் 574 படைப் பிரிவுகள் வந்துள்ளன. தேர்தலுக்காக 20,545 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லா வாக்குச் சாவடிகளிலும் வீடியோ கேமரா மூலம் வாக்குப் பதிவைப் படமெடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளத ு. தேர்தல் முறையாக நடக்கிறதா என்று கண்காணிப்பதற்காக 4,800 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் பணிகளில் மத்திய மாநில அரசுகளைச் சேர்ந்த 1,23,000 ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இதையடுத்து வருகிற 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அன்றே முடிவுகள் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலச் சட்டப் பேரவையின் ஆயுட்காலம் டிசம்பர் 26 ஆம் தேதியுடன் முடிகிறது. கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 182 இடங்களில் பா.ஜ.க. 127 இடங்களில் வெற்றிபெற்றத ு, காங்கிரஸ் 51 இடங்களையும ், ஐக்கிய ஜனதா தளம ், சுயேட்சைகள் ஆகியோர் தலா 2 இடங்களையும் கைப்பற்றினர். அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்தில் முதல்கட்டத் தேர்தலைப் போன்றே பரபரப்புக்கு பஞ்சமில்லை. அகமதாபாத்தில ் நடைபெற் ற தேர்தல ் பிரச்சா ர பேரணியில் பேசி ய காங்கிரஸ ் தலைவர ் சோனிய ா, குஜராத ் மாநி ல அரச ு விவசாயிகள ை புறக்கணித்த ு விட்டதா க குற்றம ் சாட்டினார ். சிறி ய, நடுத்த ர தொழிற்சாலைகள ் வளர்ச்ச ி பெறவில்ல ை என்றும ் அவர ் கூறினார ். சோனியாவுக்க ு பதிலட ி கொடுக்கும ் வகையில ் குஜராத ் முதல்வர ் மோடியும ் தீவி ர பிரச்சாரத்தில ் ஈடுபட்டார ். தன ் மீத ு எந் த ஊழல ் புகாரும ் இல்லையென்பதால ் தமக்க ு மீண்டும ் ஆட்ச ி செய் ய வாய்ப்ப ு அளிக் க வேண்டும ் என்ற ு வாக்காளர்கள ை அவர ் கேட்டுக ் கொண்டார ். அதேநேரத்தில் இரண்டு கட்சிகளும் பழங்குடியினரின் வாக்குகளைப் பெறுவதற்காக பணத்தை வாரி இறைத்துள்ளனர் என்பதிலும் சந்தேகமில்ல ை. வாழ்க்கைக்காக தங்களின் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ள பழங்குடியினர ், வாக்களிப்பதற்காக வர வேண்டும் என்ற விடயத்தில் இரு கட்சிகளும் மெனக்கெட்டுள்ளன. வாக்குப் பதிவு நடக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள முக்கிய நகரங்களில் நிறைந்து கிடக்கும் தங்கும் விடுதிகளே இதற்குச் சாட்சி. கடந்த 11 ஆம் தேதி 87 தொகுதிகளுக்கு நடந்த முதல்கட்ட பதிவில் 60 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் ஆளும் பா.ஜ.க. வுக்கு அதிகமான இடங்கள் கிட்டும் என்று சில கணிப்புக்களும், காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றும் என்று சில கணிப்புக்களும் கூறியுள்ளன.
செயலியில் பார்க்க x