நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால், அத்வானி பிரதமராவார் என்று அந்த கட்சி அறிவித்துள்ளது. புது டெல்லியில் நேற்று நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் லாலு பிரசாத்திடம் இது குறித்து கேட்டதற்கு, "அத்வானியின் ஜாதகத்தில் பிரதமர் பதவியில் அமருவதற்கான ராசியே இல்லை'' என்று கூறினார்.
இதே விழாவில் பங்கேற்ற லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான், `இது உட்கட்சி விவகாரம். எனவே எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது' என்று கூறினார்.