மலேசிய இந்தியர்கள் மீது தாக்குதல் : பிரதமர் கவலை!

Webdunia

வெள்ளி, 30 நவம்பர் 2007 (20:56 IST)
மலேசிய இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கவலையளிக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், அவரைச் சந்தித்த ஐரோப்பிய யூனியனில் அங்கமாகவுள்ள போர்ச்சுகல் நாட்டின் பிரதமர் ஜோஸ் சாக்ரட்டீசும் கூறியுள்ளனர்!

தலைநகர் டெல்லியில் பிரதமர்கள் இருவரும் ஒன்றாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மலேசியாவில் நடைபெற்று வரும் நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், "அப்பிரச்சனை எங்களுக்கு கவலையளிக்கிறது. இந்தியர்களோ அல்லது இந்திய சம்வாவழியினரோ தாக்கப்படும் பொழுது அது எங்களுக்கு கவலையளிப்பதாகும்" என்று கூறினார்.

மனித உரிமைகள் எங்கு நசுக்கப்பட்டாலும் அதனைக் கண்டிப்பதும், அதே நேரத்தில் மனித உரிமைகளுக்கான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதும் எங்களது கடமையாகும் என்று போர்ச்சுகல் பிரதமர் சாக்ரட்டீஸ் கூறினார்.

தற்பொழுது நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இப்பிரச்சனையில் இதற்குமேல் எதுவும் கூற இயலாது என்று பிரதமர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்