18ஆ‌ம் தேதி முதல் கேரளாவில் லாரிகள் வேலை ‌‌நிறு‌த்த‌ம்!

Webdunia

செவ்வாய், 9 அக்டோபர் 2007 (10:28 IST)
தொழிலாளர் நல நிதியின் உரிமையாளர் பங்கு தொகையை அரசு அதிகரித்துள்ளதை ‌திரு‌ம்ப பெற கோ‌ரி கேரளா‌வி‌ல் லா‌ரி உ‌ரிமையாள‌ர்க‌ள் வரு‌ம் 18ஆ‌ம் த‌ே‌தி வேலை ‌நிறு‌த்த‌த்த‌ி‌ல் ஈடுபடு‌கிறா‌ர்க‌ள்.

கேரள லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் முகமது அலி, செயலாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் கொச்சியில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் கூறுகை‌யி‌ல், கடந்த 30 மாதங்களில் தொழிலாளர்களின் நல நிதியின் நிலுவைத்தொகையை செலுத்தாத லாரி உரிமையாளர்களிடம் இருந்து வாகன வரியை வசூலிக்க மாட்டோம் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் எங்கள் வாகனத்தை முடக்க அரசு முயல்கிறது எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌‌றின‌ர்.

கடந்த ஆட்சியின் போது இருந்ததை விட இப்போது தொழிலாளர் நல நிதியின் உரிமையாளர் பங்கு தொகையை அரசு அதிகரித்துள்ளது. இது எங்களுக்கு கூடுதல் சுமையாகும் எ‌ன்று அவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

எனவே இந்த அறிவிப்பை அரசு திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் வரு‌ம் 18ஆ‌ம் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் எ‌ன அவ‌ர்க‌ள் கூ‌றின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்