வா‌க்காள‌ர் ப‌ட்டியலை தயா‌ர்படு‌த்த மா‌நில‌ங்களு‌‌க்கு தேர்தல் ஆணைய‌ம் உ‌த்தரவு!

Webdunia

செவ்வாய், 9 அக்டோபர் 2007 (09:58 IST)
குடியசு‌த் தலைவரை சோ‌னியா கா‌ந்‌தி ச‌ந்‌தி‌த்து பே‌சியதை தொட‌ர்‌ந்து பாராளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும். இ‌ந்த ‌நிலையில், மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணைய‌ர் நேற்று நட‌த்‌‌திய அவசர ஆலோசனை கூ‌ட்ட‌த்‌‌தி‌‌ல் வா‌க்‌காள‌ர் ப‌ட்டியலை தயா‌ர்படு‌த்த மா‌நில‌ங்களு‌க்கு தே‌ர்த‌ல் ஆணைய‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

பாராளுமன்ற தேர்தலுக்குப்பின், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ஆ‌ட்‌சி பொறு‌ப்பை ஏற்றது. பெரும்பான்மை பலம் இல்லாததா‌ல் இடதுசாரி கட்சிகள் ஆதரவுட‌ன் கா‌ங்‌கிர‌ஸ் ஆ‌ட்‌சி நட‌த்‌தி வரு‌கிறது. இந்த நிலையில், இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்த பிரச்சினையில் காங்கிரசுக்கும், இடதுசாரி கட்சிகளுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இ‌ந்த ‌நிலை‌யி‌‌ல், பாராளுமன்றத்துக்கு இடைத்தேர்தலை சந்திக்க தயார் என்று சோனியாகாந்தி கூ‌றினா‌ர். அத்துடன் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள், நாட்டின் வளர்ச்சிக்கு எதிரிகள் என்றா‌ர். அத‌ற்கு பதிலடியாக, தேர்தலை சந்திக்க தயார், அதற்கான பொறுப்பை காங்கிரஸ்தான் ஏற்கவேண்டும் என்று இடதுசாரி கட்சி தலைவர்கள் கூ‌றினா‌ர்க‌ள்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாராளுமன்றத்துக்கு 2009ஆ‌ம் ஆண்டு நடைபெறவேண்டிய தேர்தல், முன்கூட்டியே வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதை உறுதி செய்யும் வகை‌யி‌ல், பாராளுமன்றத்துக்கு எந்த நேரத்திலும் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணைய‌ம் தயாராகி வருகிறது. தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களை சேர்ந்த 14 மாநிலங்களை சேர்ந்த தலைமை தேர்தல் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நே‌ற்று நட‌ந்தது.

தலைமை தேர்தல் ஆணைய‌ர் கோபாலசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணியை நவம்பர் மாதமே தொடங்கிவிடவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. வரு‌ம் ஜனவரி 15ஆ‌ம் தேதிக்குள், திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை இறுதி செய்து தயார்நிலையில் வைத்திருக்கும்படியும் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது.

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, வாக்குச்சாவடிகள் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தேர்தல் நிர்வாக நடைமுறைகள் பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 14 மாநிலங்களை தவிர, மற்ற மாநில தேர்தல் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி திடீரென்று, நேற்று குடியரசு‌த் தலைவ‌ர் பிரதீபாபட்டீலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது.

பாராளுமன்றத்துக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்ற சூழ்நிலையில் ஜனாதிபதியை சோனியாகாந்தி சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால், இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று, ஜனாதிபதி மாளிகை வட்டார தகவல்கள் தெரிவித்தன.

அமெரிக்க பயணம் குறித்தும், ஐ.நா.சபையில் ஆற்றிய உரை பற்றியும் சோனியாகாந்தி ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக, காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். இன்று அல்லது நாளை பிரதமர் மன்மோகன்சிங்கும் ஜனாதிபதியை சந்தித்து பேச திட்டமிட்டு இருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்