ரோனன் சென் கருத்தைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளி

Webdunia

செவ்வாய், 21 ஆகஸ்ட் 2007 (12:15 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எதிர்க்கும் கட்சிகளை தலையற்றக் கோழிகள் என்று அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ரோனன் சென் கூறிய கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் செய்த அமளியால் மாநிலங்களவை நடவடிக்கைகள் தள்ளிவைக்கப்பட்டது.

இன்று காலை மாநிலங்களவை கூடியதும் எதிர்க்கட்சிகளும், ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் இடதுசாரிகளும் ஆங்கில பத்திரிக்கை ஒன்றைக் காட்டி பெருங்குரல் எழுப்பினர்.

இந்திய தூதரின் கருத்து வன்மையான கண்டனத்துக்குரியது என்று கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய முழக்கங்களால் அவை நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை அடுத்து நண்பகல் 12 மணி வரை அவை நடவடிக்கைகளை தள்ளிவைப்பதாக அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி தெரிவித்தார்.
(வார்த்தா)

வெப்துனியாவைப் படிக்கவும்