அசாமில் கடந்த 3 நாட்களில் ஹிந்தி பேசும் மக்கள் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மேலும் 4 பேர் நேற்றிரவு தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
அசாம் மாநிலத்தில் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் ஹிந்தி மொழி பேசும் குடும்பத்தினர் வாழும் வீடுகளின் மீது தீவிராவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சம்பவங்களில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், நேற்றிரவு உல்பா, கர்பி லாங்கி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஹிந்தி பொழி பேசும் மக்கள் 4 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரண உதவிகள் குறித்தும், தீவிராவாதிகளை பிடிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் அசாம் மாநிலத்துடன் தொடர்பு கொண்டு விசாரித்ததாக பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.