அரசை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்

புதன், 11 ஜூலை 2007 (10:56 IST)
செல்பேசி தொலை தொடர்பு விரிவாக்கத்திற்காக மத்திய அரசின் தொலைதொடர்பு துறை வாங்க திட்டமிட்ட நவீன உபகரணங்களை உடனடியாக வாங்க வலிறுத்தி பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.

தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த போது ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு கொள்முதல் செய்ய முடிவெடுக்கப்பட்ட 45.5 மில்லியன் ஜிஎஸ்எம் இணைப்பை நடைமுறைப்படுத்தாததால் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.36 கோடிவரை இழப்பு ஏற்படும் என்று அந்நிறுவனத்தின் ஊழியர் சங்க செயலர் ஆர்.குணசேகரன் கூறியுள்ளார்.

பிஎஸ்என்எல் செல்பேசி தொடர்பை விரிவு படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் தாமதப்படுத்துவதனால் தனியார் நிறுவனங்களே பயன்பெற்று வருவதாகவும், இதனால் பிஎஸ்என்எல் நிறுவனமே பதிக்கப்படுகின்றது என்றும் குணசேகரன் கூறியுள்ளார்.

45.5 மில்லியன் ஜிஎஸ்எம் லைன்களை தராததால் 3ஜி செல்பேசி சேவைகளை துவக்க முடியாத நிலைக்கு பிஎஸ்என்எல் தள்ளப்பட்டு உள்ளதாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் தமிழக வட்ட செயலர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்