அதிக விலை கொண்ட பங்குகளுக்கு ஏற்பட்ட வரவேற்பின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் இன்று சீரான முன்னேற்றம் காணப்பட்டது!
மும்பை பங்குச் சந்தைக் குறியீடு ஒருகட்டத்தில் 126 புள்ளிகள் உயர்ந்து 15,085 புள்ளிகளைத் தொட்டது. அதன்பிறகு 40 புள்ளிகள் குறைந்து, நேற்றைய வணிகத்தின் முடிவில் இருந்ததைவிட 81 புள்ளிகள் அதிகமாக 15,045 புள்ளிகளில் முடிந்தது.
தேச பங்குச் சந்தை 34 புள்ளிகள் (0.8 விழுக்காடு) உயர்ந்து 4,419 புள்ளிகளாக முடிந்துள்ளது.
ரிலையன்ஸ் எனர்ஜி, எல் அண்ட் டி, எஸ்.பி.ஐ., என்.டி.பி.சி., விப்ரோ, டி.சி.எஸ். ஓ.என்.ஜி.சி. ஆகியவற்றின் பங்குகளின் விலைகள் கணிசமாக உயர்ந்தது.
இந்துஸ்தான் லீவர், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, சிப்லா, கிராசிம், மாருதி உத்யோக் ஆகியன சரிவைச் சந்தித்துள்ளது.
பங்குச் சந்தையில் இன்று காணப்பட்ட ஏறுமுகம் தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் நீடிக்கும் என்று பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.