அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

Webdunia

ஞாயிறு, 8 ஜூலை 2007 (12:11 IST)
அமர்நாத் பனிலிங்கத்தைக் காணச் செல்லும் வழிகளில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் அமர்நாத் யாத்திரை சென்ற 12,000 பக்தர்களும் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று செய்தித் தொடர்பாளர் யு.என்.ஐ. செய்தியாளரிடம் கூறியுள்ளார்.

வானிலை சரியில்லாத காரணத்தால் அமர்நாத் செல்லும் ஹெலிகாப்டர் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

அமர்நாத் செல்லும் பாதைகள் முழுவதும் பனிப் பொழிவு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 1,350 பேர் பனிலிங்கத்தை தரிசித்துவிட்டு திரும்பும் போது மலையின் அருகிலேயே மாட்டிக் கொண்டுள்ளனர். எனினும் அவர்கள் பத்திரமாகவே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் தற்போது பயணம் மேற்கொள்வது ஆபத்தானது என்பதால் அமர்நாத் யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்