ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற கூட்டத்தொடர்!

Webdunia

வியாழன், 5 ஜூலை 2007 (18:19 IST)
வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கூட்டப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் குறித்து வறுகிற 11 ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூடி முடிவெடுக்க உள்ளதாக நாடாளுமன்றத்தின் விவகாரத்துறை அமைச்சர் தாஸ்முன்ஷி டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வழக்கமாக நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 3வது வாரத்தில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூடடத்தொடரில் ஜப்பான் பிரதமர் ஷிசோ அபி உரைற்றுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்