குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிரதீபா பாட்டில், பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோரது மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மற்ற மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
குடியரசுத் தலைவர் தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடது சாரி கட்சிகள் சார்பில் பிரதீபா பாட்டீலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவுடன் பைரோன் சிங் ஷெகாவத் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.
மொத்தம் 84 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்தது. பிரதீபா பாட்டீல், ஷெகாவத் அகியோரின் மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டதாகவும், மற்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தேர்தல் அதிகாரி பி.டி.டி. ஆச்சாரி தெரிவித்தார்.
இதனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான பிரதீபாவுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் போட்டியிடும் பைரோன் சிங் ஷெகாவத்திற்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.