தேரா சச்சா சவுதா மதகுருவை கைது செய்ய நீதிமன்றம் தடை!

Webdunia

சனி, 30 ஜூன் 2007 (14:32 IST)
தேரா சச்சா சவுதா மதகுருவை ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி வரை கைது செய்ய பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது!

தேரா சச்சா சவுதா மதகுரு குர்மீட் ராம் ரஹீம் சிங், சீக்கிய மத குருவான கோவிந்த் சிங் போல் உடையணிந்ததை அடுத்து பஞ்சாபில் பயங்கர கலவரம் வெடித்தது.

இது தொடர்பாக, கலவரத்தை தூண்டியதாக தேரா சச்சா சவுதா மதகுரு குர்மீட் ராம் ரஹீம் சிங் மீது இந்திய தண்டனைவியல் சட்டப் பிரிவு 295ஏ-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் குர்மீட் ராம் ரஹீம் சிங் எப்பொழுதும் கைது செய்யப்படலாம் என்பதால் ஹரியானாவில் பதற்றம் நிலவியது.

இந்நிலையில், கைது உத்தரவிற்கு தடைவிதிக்கக் கோரி தேரா சச்சா சவுதா சார்பில் ஹரியானா, பஞ்சாப் நீதிமன்றத்தில் மனதாக்கல் செய்யப்பட்ட்து. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல்.என். மிட்டல், குர்மீட் ராம் ரஹீம் சிங்கை வருகிற ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி வரை கைது செய்ய தடைவிதித்து உத்தரவிட்டார்.

மேலும், குர்மீட் ராம் ரஹீம் சிங் தனது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்