வங்க கடலில் புயல் சின்னம் : ஆந்திராவில் மழை பெய்ய வாய்ப்பு!

Webdunia

திங்கள், 25 ஜூன் 2007 (20:16 IST)
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் காரணமாக ஆந்திரா, ஒரிசா ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் வங்க கடலில் உருவான புயல் ஆந்திரா மாநிலத்தில் காக்கி நாடா அருகே கரையை கடந்தது. இதனால் ஆந்திரா, கர்நாடகம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்தது.

இந்நிலையில், வங்க கடலில் புதிய புயல் சின்னம் ஒன்று உருவாகி உள்ளது. வடமேற்கு வங்கக் கடலில் ஆந்திரா - ஒரிசா கடற்கரையையொட்டி இந்த புயல் உருவாகி இருப்பதாக விசாகப்பட்டிணம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் அடுத்த 48 மணி நேரத்தில் தீவிரம் அடைவதால் ஒரிசா, வடக்கு ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்