அசாமில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி

Webdunia

திங்கள், 25 ஜூன் 2007 (16:38 IST)
அசாம் மாநிலம் கக்கார் மாவட்டத்தில் சரக்கு ரயில் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ரயில்வே ஊழியர்கள் 5 பேர் பலியாயினர்.

அசாம் மாநிலம் கக்கார் மாவட்டத்தில் சரக்கு ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. தியகு, முபா ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பாலத்தில் ரயில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென பாலம் உடைந்தது.

இதனால் நிலைகுலைந்த சரக்கு ரயிலின் 6 பெட்டிகளும், இரண்டு என்ஜின்களும் ஆற்றுக்குள் கவிழந்தது. எதிர்பாராத இந்த விபத்தில் ரயில்வே ஊழியர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

பலியானவர்களின் உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டதாகவும், அவர்கள் யார் என்ற அடையாளம் தெரியவந்துள்ளது என்றும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய உணவுக் கழகத்திற்கு அரிசி கொண்டு சென்ற போது இந்த விபத்து நடந்திருப்பதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


வெப்துனியாவைப் படிக்கவும்